பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட் ; கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. பேரறிவாளன் மனு மீது கடந்த மே 4ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று நீ கேட்ட நீதிபதிகள்.. அந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக் கூடாது?’ என்று தெரிவித்தனர்.

மேலும் பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக மே 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் அப்படி மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் படி இன்று இந்த வழக்கு விசாரணை தொடங்கியது இன்றைய தினம் நீதிபதிகள் மத்திய அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். கவர்னருக்கு மத்திய அரசு சார்பில் வாதிடுவது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா. பேரறிவாளன் விவகாரம்: இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நாங்கள் முடிவு எடுக்கப்போவதாக கூறிய பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து அதிகாரமும் ஜனாதிபதிக்குதான் என்றால், 75 ஆண்டுகளாக கவர்னர்கள் அளித்த மன்னிப்பு அனைத்தும் முரணானதா?

கவர்னருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, மத்திய அரசு வாதிடக் கூடாது
பேரறிவாளன் வழக்கில் தமிழக கவர்னருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு.

அரசமைப்பின்படியும் சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும் மத்திய அரசுதரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்தி ய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

கவர்னர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது
சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் தெதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்த்னர்.

Related posts