முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த முதல் முறை இதுவாகும்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (18) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.
——
டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு பிரினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோ, சீதாவக்கபுர பிரதேச சபை தலைவர் ஜயன்த ரோஹண மற்றும் களனிய பிரதேச சபை உறுப்பினர் மஞ்சு பிரசன்ன ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—-
கொள்கைகளை காட்டிக் கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
225 பேரும் வெட்கமற்றவர்கள் என 22 மில்லியன் மக்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கைகளுக்கு துரோகம் செய்யாமல் சரியான நிலையில் இருந்து சுயமரியாதையை பேணுமாறு அவர் தெரிவித்துள்ளார்.