கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 243.50 ரூபாவாகும்.
இந்த விலை அதிகரிப்புடன் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை கொள்வனவு செய்வதற்கு பத்தாயிரம் ரூபாவிற்கு மேல் செலவாகும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.