முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
அதன்படி முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12 மணி முதல் கட்டண திருத்தம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
—
அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 32 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
350 பிரிவுகளின் கீழ் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.