கர்த்தரே வெளிச்சமாக இருக்கட்டும் !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். 2சாமுவேல் 22: 29
அண்மையில் நான் சந்தித்த பல குடும்பங்களில் இருந்த வேதனைகளை இன்றைய அலைகள் சிந்தனையாக எழுத விரும்புகிறேன். சம்பவங்கள் தேவைகள் வேறாக இருந்தாலும், தங்கள் வாழ்க்கையில் பல விதங்களில் தாக்குக்கொண்டிருக்கும் பலர், ஒரே காரியத்தைத்தான் சொன்னார்கள். ”என் வாழ்க்கை இருண்டுவிட்டது, நான் சீக்கிரமமாக இதில் இருந்து வெளிவர வேண்டும் ”. அவர்களுக்குள் இருந்த இயலாமை, அவசரம் மாத்திரமல்ல, சீக்கிரமாக என்ற வார்த்தை. அவர்கள் தமது பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு மாற்று வழியை தாமே தமக்கு வகுத்து வைத்திருந் ததையும் வெளிக்காட்டியது.
சார்ல்ஸ் ஸபர்ஜன் என்ற ஒரு கிறிஸ்தவ மிசனறி கீழ்வருமாறு கூறினார். ” நான் இருளில் இருக்கிறேனா? ஆண்டவரே என் இருளை வெளிச்சமாக்குவீர். காரியங்கள் சீர்கெட்டு மோசமானவைகளாகவும் துயரம் நிறைந்தவைகளாகவும் மாறலாம். மேகங்கள்மேல் மேகங்கள் குவிந்து ஒளியை மறைக்கலாம். என் கரங்களையே நான் காணதபடி கும்மிருட்டு ஏற்படினும் கர்த்தருடைய கரத்தை நான் காண்பேன் என்றார்.
இந்த அசைக்க முடியாத நம்பிக்கை நமக்குள்ளும் துளிர்விட்டாலே போதும். வுhழ்வில் வரும் இருள் போன்ற எந்தப் பிரட்சனைகளைக் கண்டும் நாம் பயப்பட மாட்டோம். ஆனால் காரியம் கெட்டுப்போவது நமது அவசரத்தால் ஆகும். ஏல்லாம் தலைகீழாக மாறும்போது பேசாமல் இருப்பது மிகவும் கடினமாகத்தான் தெரியும். ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறோம். யோசனையின்றி செயலில் இறங்கி விடுகிறோம். அதுவே நம்மைச் சூழஇருக்கும் இருள் அந்தகாரம் அடைய காரணமாகி விடுகிறது. அவற்றை நாம் சிந்திப்பதில்லை.
தேவன் நமக்கு வெளிச்சமாக வேண்டும் அதிலேதான் நமது வாழ்வின் வெற்றியின் இரகசியம் தங்கியுள்ளது. ஒருதடவை நானும் எனக்கு வெளிச்சம் உண்டாக்க பலவழிகளை யோசித்தேன். வேதத்தில் ஏசாயாவின் புத்தகத்தில் 50: 10-11 வசனத்தின்படி எச்சரிக்கப்பட்டேன். உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக்கேட்டு, தனக்கு வெளிச்சம் இல்லாததால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்i நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன். இதோ, நெருப்பைக் கொழுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள், என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும். இந்த வார்த்தையின்படி நான் எச்சரிக்கப்பட்டேன். தேவ கரத்தில் என் இருளை ஒப்புவித்து காத்திருந்து ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டேன்.
அலைகள் வாசகநேயர்களே, நீங்கள், உங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட போராட்டங்களில் சிக்கித்தவிர்க்கிறீர்களா? ” நீங்கள் நின்றுகொண்டு கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.” என்ற சத்தம் உங்கள் காதுகளில் கேட்கட்டும். ” இருளிலே வெளிச்சம் உண்டாகக்கடவது ” என்று பேசிய தேவன் உங்கள் வாழ்விலும் ஒளியைக் கொண்டுவர இன்றும் உயிரோடு இருக்கிறார். ஆம், கர்த்தர் உங்கள் வாழ்வை வெளிச்சமாக்குவார். ஆகவே அவர் கரத்தினுள் அடங்கியிரு. நீயாக இருளை அயற்ற முயற்சிக்காதே. புpன்னர் உன் அழிவுக்கு அதுவே காரணமாகிவிடம்.
ஆன்பின் பரலோக பிதாவே, என் பிரட்சனைகளுக்கு நான் நினைத்த மாற்று வழிகளை விட்டு, உம்முடைய சித்தத்தின்படியாக எல்லாம் நிறைறே நான் காத்திருந்து ஆறுதலைக் கண்டடைய உதவி செய்யும் நல்ல தகப்பனே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark