டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா

நடிகர் டி.ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக 2 நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம், உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் டி.ராஜேந்தருக்கு திடீரென, நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்தநிலையில், டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து நடிகர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார்.

கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில், நடிகர் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக 2 நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக டி.ராஜேந்தர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts