உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 23
தேவ நம்பிக்கையை ஊட்டுதல் !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாய்க்கியவான். சங். 146: 5
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓர் யுத்தகாலத்தில் அற்புதவிதமாக தேவ பாதுகாப்பைப் பெற்ற ஓர் குடும்பத்தைச் சந்தித்Nதுன். அவர்கள் குடும்பமாக என்னிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர். வேதாகமக் கதைகள் பலவற்றை நேரம் கிடைக்கும் போததெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம். யுத்தம் ஆரம்பித்து செல்கள் விழுந்து கொண்டிருந்தது. நாம் கலக்க முற்றோம். ஆந்தச் சமயத்தில் எமது பிள்ளைகள் ” தானியேலை சிங்கத்தின் வாயினின்று காப்பாற்றிய தேவன், மூன்று வாலிபர்களை அக்கினியினின்று காப்பாற்றிய தேவன் எம்மையும் இந்த செல்லின் அழிவில் இருந்து காப்பாற்றுவார் ” என்றனர். பிள்ளைகள் தங்கள் மழலை மொழியில் தந்த உற்சாhகம் பெற்றோராகிய எம்மையும் திடப்படுத்தியது என தமது அனுபவ சாட்சியை ஒரு பெற்றோர் நன்றிப் பெருக்கத்தோடு பகிர்ந்து கொண்டனர்.
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்;டளைகளில் ஒன்று, தமது வார்த்தைகளையும், தமது நடத்துதலையும் குறித்த எப்பொழுதும் பேசி, பிள்ளை களுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே. அவற்றைக் கருத்தாய்ப் போதித்து, உட்காரும்போதும், நடக்கும்போதும், படுத்துக் கொண்டிருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவைகளைக் குறித்துப்பேசி, அவைகளைக் கைகளில் அடையாளமாகக் கட்டி, கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாகவும் வைக்கும்படிக்கும் தேவன் கட்டளையிட்டார். தேவ நம்பிக்கையை வலுக்கட்டாயமாக ஒருவருக்குள் புகுத்தவோ, அதை ஒருவருக்கு தானமாகவே கொடுக்க முடியாது. நம்பிக்கை என்பது தானாக படிப்படியாக ஒருவனுக்குள் உருவாகும் ஒன்று. அதை உருவாக்குவதற்குத்தான் நாம் முயற்சி செய்யலாம். தேவன் செய்த காரியங்களையும் அவரது வழிநடத்துலையும், கட்டளைகளையும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருவதால், தேவ நம்பிக்கைகளுக்குள் அவர்களை வழிநடத்தலாம். சுpல சமயம் இன்று அவர்களுக்கு அது எரிச்சலாக இருந்தாலும், நாளடைவில் அவர்களுக்குள் பதிந்திருந்து, நிச்சயம் அவர்களை ஏற்ற சமயத்தில் வழிநடத்தும்.
நாம் நமது பிள்ளைகளுடன் தேவனுடைய காரியங்களைப்பற்றி, அவருடைய வழி நடத்தலைப்பற்றிப் பகிர்ந்து கொண்டுள்ளோமா? தேவனின் வார்த்தைகள் நமது வாழ்வில் செய்த பெரிய காரியங்களை, நமது பிள்ளைகளோடு நாம் பேசியுள்ளோமா? அவர்களுக்கு ஓர் வேதாகமத்தைப் பரிசளிக்க நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய விலையுயர்ந்த பரிசு வேதாகமமே. பேற்றோராகிய நாம் முதலில் இதை அறிந்திருக்க வேண்டும்.
” நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான். அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாய்க்கியவான்களாயிருப்பார்கள் ”. நீதிமொழி 20:7
அன்பின் பரலோக பிதாவே, நானும் எனது குடும்பமும் உமது சத்தியத்தை அறிவதோடு, அதனை எமது பிள்ளைகளும் அறிந்து அதனை ஞாபகப்படுத்தி வாழ கிருபை தாரும் நல்ல தகப்பனே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark