விவசாயிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானங்கள் தற்போது முழு நாட்டையும் பாதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய முறைமையை மாற்ற வேண்டும் – துமிந்த திஸாநாயக்க
இன்று நாடும் விவசாயிகளும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மக்களுக்கு நுகர்வுக்கு போதுமான உணவு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோல்வியுற்ற தலைவர் என்ற ரீதியில் தாம் வெளியேறத் தயாரில்லை என ஜனாதிபதி தற்போது கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாது எனவும், மக்கள் முறைமை மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.