இந்திய வெளிவிவகார செயலாளர் பிரதமருடன் கலந்துரையாடலில்

இலங்கைக்கு இன்று காலை வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

——

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரண, அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

……

தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் நேற்று (22) கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் 14,712 தொன் அரிசி, 250 தொன் பால்மா மற்றும் 38 தொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 15,000 தொன் உள்ளடக்கங்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts