ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் இன்று (08) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நேரடியாகக் கேட்டால், தற்போதைய நெருக்கடி ஜனாதிபதியால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கு மக்களிடம் எந்த வரவேற்பும் இல்லை.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கூற முடியாது. ஆனால், இவ்வளவு நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்க நாம் வேண்டும்.
இவை அனைத்திற்கும் நம்பிக்கை முக்கியம். நம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கம் செய்வதை மக்கள் நம்பாத வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு மக்கள் ஆதரவை வழங்க மாட்டார்கள்.
எனவே, நாம் பேசும் அனைத்து தீர்வுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.
எனவே, அந்த பெரிய மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒரு முக்கிய காரணியாக உள்ளார். எனவே, அந்த காரணி இருக்கும் வரை நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என்று நானும் கருதுகிறேன்.
ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என நான் நம்புகிறேன்.