ஜனாதிபதியின் கலந்துரையாடல் அறிவிப்பு!

தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்து கலந்துரையாடல் இன்று (09) மாலை 4 மணிக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தான் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

——–

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இன்று மாலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

அதில் ஜனாதிபதியை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

——

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை போராட்டக்காரர்கள் எதிர்பாராத விதமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts