முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 3 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவரது உடலில் கொரோனா பாதிப்பின் அளவும் குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வேண்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவீட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்”. என்று டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.