சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே

மாலத்தீவுக்கு குடும்பத்துடன் இன்று அதிகாலை தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு இன்று செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் தகவல் வெளியிட்டு உள்ளது. சட்டம், ஒழுங்கை மீண்டும் கொண்டு வர தேவையான என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதனை செய்யும்படி ராணுவம் மற்றும் போலீசாருக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.
—-
நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என சபாநாயகர் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவருடன் கலந்துரையதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

—–

பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

—-

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்திய மக்கள் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் எனவும், அவர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்து இன்று (13) காலை முதல் கொழும்பு, மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் பல தடவைகள் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்ட போதிலும், அந்தத் தாக்குதலையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, சிறிது நேரத்திற்கு முன்பு போராட்டக்காரர்கள் வீதி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

Related posts