கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை ஒன்றை இன்று (21) பிறப்பித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் நீதிமன்றில் இன்று ஆஜராகவில்லை.

இதனால் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

——

தான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (20) மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு வந்த அவர், வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – ஜனாதிபதி அவர்களே, மக்கள் மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்கள். நீங்கள் ராஜபக்சக்களின் நண்பன் அல்லவா? பிறகு எப்படி வித்தியாசம் இருக்கும்?

“நான் எப்படி ராஜபக்ஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே நான் அவர்களுக்கு எதிரானவர். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்”

—-

ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் பெற முயற்சித்ததாகக் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஜூலை 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதன் பின்னணியில், இது தொடர்பான தகவல்கள் பல சமூக ஊடகங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts