ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை கழுவி ஊற்றினாலும், இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு கூறும் அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுகின்றது எனவும் தெரிவித்தார்.
தற்போதைய தேவை பதவிகளை பகிர்ந்து கொள்வதல்ல என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஒருபோதும் திருடர்களுடன் சேர்ந்து அமைச்சர் பதவிகளை ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது அதற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய், சீனி, பூண்டு மோசடிகள் மட்டுமன்றி கழிவுப்பொருள் கப்பலுக்கு பணம் கொடுத்த மோசடிகளையும் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.