கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.அரசாங்கம் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதன் விளைவாக விலைகள் சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விலைகள் அதிகரிக்குமானால் ஒரு சில வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் அதே வேளை மக்கள் பாரிய அளவில் பாதிப்படைவார்கள்.
——
ஒரு முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) பரிந்துரைத்துள்ளார்.
சமீபத்தில், ஒரு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்து அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், சந்தையில் இன்னும் ஒரு முட்டை 60 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது.
—–
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த பரிசோதனையின் போது, சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
மேற்படி எட்டு உணவாக உரிமையாளர்களும் கொழும்பு அளுத்கடை மற்றும் கங்கோடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உணவக உரிமையாளர்களுக்கு தலா 82,500 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.