கேரளாவை சேர்ந்த அமலாபால் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகி அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இந்த படம் அவரை முன்னணி நாயகியாக்கியது.
தொடர்ந்து அமலா பால். தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தெய்வத்திருமகள் படத்தில் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
குடும்பத்தார் சம்மதத்துடன் கரம்பிடித்த இவர்கள் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே திருமண பந்தத்தில் நீடித்திருந்தனர். பின் 2017 ஆம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர்.
மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். இந்த நிலையில் விழுப்புர மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் அமலா பால் சார்பில் புகார் ஒன்று அளிக்கபட்டு உள்ளது.
அதில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அருகே இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக ம் புகார் அளித்து உள்ளார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார்.பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாக அமலாபால் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
காரை அடுத்து அவரது நண்பரும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாவந்தர் சிங் தத் என்ற திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.