முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நேற்றிரவு (02) இலங்கை வந்தடைந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள், எம்.பிக்கள் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்தது.
பாதுகாப்புப் படையினர் மற்றும் மற்றொரு குழுவினருடன் அவர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்.
அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு சில அமைச்சர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.