கேஜிஎஃப் 2 வெற்றியால் சினிமா துறை குழப்பத்தில் உள்ளது” என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
‘கேஜிஎஃப் 2’ படம் தொடர்பாக பேசிய பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ”பாலிவுட்டின் மிகப் பெரிய இயக்குநர் ஒருவர், ‘கேஜிஎஃப்2 படத்தை பார்க்க 5 முறை முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் முடியவில்லை’ என்று என்னிடம் சொன்னார். பிறகு அவர் அடுத்தப் படத்துக்கான வேலையில் இறங்கிவிட்டார்.
ஹாலிவுட்டில் ‘நீங்கள் கதை பற்றி வாதிடலாம், ஆனால், வெற்றியுடன் வாதிட முடியாது’ என்பார்கள். அதேபோல அந்தப் படத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் வெற்றியைப் புறக்கணித்துவிட முடியாது.
லாஜிக் இல்லாத அந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியால் இந்தி சினிமாத் துறை குழப்பத்தில் இருக்கிறது. அதற்காக எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் இல்லை. அதுபற்றி சொல்ல சரியான வார்த்தை கிடைக்கவில்லை” என்றார்.