வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சாட்டிலைட் உரிமை 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.