இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எவ்வித திட்டமுல் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஆரம்பக் கடன் உடன்படிக்கையின் பின்னர் இலங்கையின் நெருக்கடியான பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.
——–
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 8.4 வீத மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
——
நபரொருவருக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு குறைந்த பட்ச செலவு (Minimum Expenditure per person per month to fulfill the basic needs) 13,138 ரூபா என குடிசன மதிப்பீட்டுபுள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஜூலை மாதத்திற்காக நபரொருவருக்கு மாதாந்த ஜீவனோபாயத்தையே இவ்வாறு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கிணங்க 2022 ஜூலை மாதத்தின் மதிப்பீட்டிற்கு இணங்க 4பேரைக் கொண்ட குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு குறைந்தது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 52,552 ரூபா அவசியமாகும். அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இதற்கு 56,676 ரூபா தேவையாகும்.
இந்த மதிப்பீடானது ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்றவாறு கணிப்பிடப்பட்டுள்ளதுடன், அதிக செலவு ஏற்படும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதுடன் கொழும்பில் வாழும் நபரொருவருக்கு ஏற்படும் செலவு 14,169 ரூபாவாகும்.
இதற்கிணங்க செலவு குறைந்த மாவட்டமாக மொனராகலை மாவட்டம் காணப்படுவதுடன், அங்கு நபரொருவருக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 12,562 ரூபா செலவாகும். 2022 ஜூன் மாதத்தில் இம்மதிப்பீடானது கொழும்பு மாவட்டத்தில் 13,421 ரூபா ஆகவும், மொனராகலை மாவட்டத்தில் 11, 899 ரூபா ஆகவும் காணப்பட்டது.
2022 ஜூலை மாதத்தில் அறிக்கையிடப்பட்ட அதிக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டி மதிப்பீடானது, மாதந்தம் அண்ணளவாக வறுமைக் கோடு அதிகரிப்பதற்குக் காரணமாகும் என குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்தது.