என் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார்கள்” என ஒரு சிறு பட தயாரிப்பாளர் வேதனை அடைந்துள்ளார். பொதுவாக எல்லா தயாரிப்பாளர்களும், தயாரிப்பு சங்கங்களும் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக விழா மேடைகளில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இருப்பினும் சிறு பட தயாரிப்பாளர்களின் வேதனை குரல்கள் தொடர்கின்றன. சமீபத்தில் பாதிக்கப்பட்டவர், ‘டூடி’ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மதுசூதன். ‘டூடி’ படத்தை ஓட விடாமல் செய்து விட்டார்கள் என்பது இவருடைய குற்றச்சாட்டு.
அவர் கூறியதாவது:- ‘டூடி’ ஒரு நல்ல படம். படத்தை பார்த்த விமர்சகர்கள் அனைவரும் பாராட்டினார்கள். இந்த படத்தை திரையிடுவதற்காக, 50 தியேட்டர்கள் பேசி முடிக்கப்பட்டன.
ஆனால், பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்து படத்தை ஓடவிடாமல் செய்து விட்டார்கள். நான் யாரிடம் போய் முறையிடுவது? படக்குழுவினர் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் வேதனைகளை யார் தீர்ப்பது? ஒரே நாளில் என் படம் முடிந்துவிட்டது. எங்கள் வாழ்க்கை இருண்டு போய்விட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.