நாட்டில் மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் கூட கருத்துக்களை வெளியிடுவதை நசுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமையை கூட அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பிலேயே இன்று பாராளுமன்றத்தில் பிரதான விவாதம் இடம்பெற்றது. மேற்படி விடயம் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது சிந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எமது யோசனையால் அரசாங்கம் அச்சமடைந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பேச்சுரிமை அடிப்படை உரிமை மீறப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகள் பற்றிப் பேசி பயனில்லை. இது பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும்.
“இது தொடர்பாக நமது நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.” “பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு, பாராளுமன்றங்களுக்கு இடையிலான அமைப்பு மற்றும் தெற்காசிய SAAC பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கும் எழுத்துப்பூர்வ குறிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.