தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்தில் சிக்கி, கடலில் மூழ்கிய பழமையான கப்பல் ஒன்றின் பாகங்களை கண்டுபிடித்தனர்.
சமீபத்தில் இஸ்ரேல் கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கப்பலைக் கண்டுபிடித்துள்ளனர். இது 1,200 ஆண்டுகள் பழமையான கப்பல் ஆகும். இது ஒரு வணிகக் கப்பல் என்று நம்பப்படுகிறது.
அந்த கப்பல் கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த கப்பல் சுமார் 25 மீட்டர் (82 அடி) நீளம் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அப்பகுதியில் நடைபெற்ற மிக ஆழமான பெரிய கப்பல் விபத்து இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
அக்காலத்தில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரை தனது ஆதிக்கத்தை இஸ்லாமியக் குடியரசு நாடுகள் விரிவுபடுத்தியது என்பதை இது காட்டுகிறது. மத கலவரம், பதட்டங்கள் இருந்தபோதிலும் அந்த காலகட்டத்தில் வணிகம் இன்னும் செழித்து இருந்தது என்பதை இது காட்டுகிறது.
சைப்ரஸ், எகிப்து, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்காவின் கடற்கரை உட்பட மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் இருந்து அந்த கப்பல் பொருட்களை எடுத்துச் சென்று வணிகம் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆழ்கடல் நீந்துபவர்கள் ஆழத்தில் இறங்கி கப்பலின் பழங்கால இடிபாடுகளில் இருந்து கலைப்பொருட்களை மீட்டனர். அந்த கப்பலில் இருந்த 200 ஜாடிகளைக் கண்டுபிடித்தனர்.
அவற்றில் அக்காலத்தில் கொண்டுசெல்லப்பட்ட பல்வேறு உணவுகள் இன்னும் உள்ளன.அவற்றில் மீன் சாஸ், பல வகையான ஆலிவ்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் அத்திப்பழங்கள் உட்பட மத்திய தரைக்கடல் பகுதி உணவுகள் இன்னும் உள்ளன.