நீருக்கடியில் திமிங்கல கல்லறைகளை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை தட்டிச் சென்றார். கிரீன்லாந்து, நீருக்கடியில் திமிங்கல கல்லறைகளை அற்புதமாக படம்பிடித்துக் காட்டிய சுவீடன் நாட்டு புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் நீருக்கடியில் புகைப்படப் போட்டியான ‘ஸ்கூபா டைவிங் 2022’ புகைப்படப் போட்டியில் (வைட் ஆங்கிள் ஷாட்)பரந்த கோணத்தில் எடுக்கப்படும் புகைப்படப் பிரிவில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
டாசன் மற்றும் அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் 3 அடி நிரம்பிய பனிக்கட்டிக்கு கீழ் இருக்கும் படங்கள் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் உள்ளூர் இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரிக்கின்றனர்.
அவற்றை உரித்த பின்னர், திமிங்கல எலும்புகள் கடலில் வீசப்படுகின்றன. அவர் நீருக்கடியில் தனது கேமராவில் படம்பிடித்த திமிங்கல கல்லறையின் சில புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
“ஸ்கூபா டைவிங் இதழ் எனது படத்தை வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.