ஜனாதிபதியின் விஷேட உரை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து இந்த உரையை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் ஜனாதிபதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.

—–

2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்,

01. ´உணவுக் கொள்கைக் குழுவை´ நிறுவுதல்.

02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்.

03. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ் (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை.

04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்.

05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம்.

06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல். என்பன அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

——-

மின்சாரம் வழங்கல் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிபபு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட் வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு ஆகிய அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதினதியின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

—–

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடைகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை தொடர்பில் கனடா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தயார் செய்துள்ள இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புகூறல், மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts