பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானது புனர்வாழ்வு சட்டம் எனவே இந்த நாட்டிலே நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (08) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் தமிந்த தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட் பேரணியில் நா.உ. இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.;
இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் தமிழ் பேசும் மக்களை கடந்த 40 வருடமாக அடக்கிய சட்டம் தான் இந்த சட்டம் 2019 ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் பேசும் மக்களான இஸ்லாமிய சகோதரர்களை இந்த தடைச் சட்டத்தில் கைது செய்தனர்.
2022 ம் ஆண்டு விசேடமாக நீண்ட காலத்திற்கு பின்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள சகோதரர்களை இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தனர்.
தமிழ் பேசும் மக்கள் இது ஒரு மோசமான சட்டம் இதனை நீக்கவேண்டும் இந்த சட்டத்தின் ஊடாக எங்கள் மக்களுக்கு அநீதி நடக்கின்றது என தெரிவித்தபோது ஒரு சிலர் பார்வையாளர்களாக இருந்தாளும் கூட இன்று இந்த சட்டம் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக பயன்படுத்தும் போது அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என போராடுகின்றோம்.
கடந்த 25 நாட்களாக இந்த சட்டத்தை முழுமையாக நீக்க கோரி காங்கேசன்துறையில் இருந்து அம்பாந்தோட்டை வரைக்கும் கையொழுத்து போராட்டத்தை செய்திருந்தோம். அந்த கையொழுத்து போராட்த்தில் கூட நாங்கள் பெரும்பான்மை சமூக சகோதரர்களை சேர்த்து இந்த போராட்டத்தை செய்திருந்தோம்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, தேரர் போன்றோரை உடன் விடுதலை செய்ய வேண்டும் என கோருகின்றோம் ஆனால் அதனுடன் சேர்த்து இதே சட்டத்தில் கைது செய்து நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
இன்று மேடையிலே 50 நாட்களாக சிறையிலே இருக்கின்றனர் என பேசும் இவர்கள் எங்களுடைய உறவுகள் இந்த சட்டத்தில் கைது 5 ஆயிரம் நாட்களாக சிறையில் இருப்பதை ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால் இவ்வாறு சில விடயங்களில் இரு சமூகத்துக்குள் கருத்து முரண்பாடு இருந்தாலும் கூட இந்த சட்டத்தை நீக்கும் கோரிக்கையில் இன்று ஒன்றாக இணைந்திருக்கின்றோம்.
இந்த சட்டத்தை நீக்க கோரியுள்ள நிலையில் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி இந்த சட்டத்தை விட மோசமான சட்டத்தை கொண்டு வந்து மக்களை அடக்குவதற்கும் முடக்குவதற்கும் சில முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அவ்வாறு ஒரு சட்டம்தான் புனர்வாழ்வு சட்டம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் ஆவது சிறையில் வைத்திருக்க சில உத்தரவு எடுக்கவேண்டும். ஆனால் புனர்வாழ்வு சட்டம் கொண்டுவந்தால் எவரையும் விரும்பிய காலப்பகுதியில் தாங்கள் நினைக்கும் வரைக்கும் வைத்திருந்து சித்திரவதை செய்யலாம் அவர்களை புன்வாழ்வு என்று வதைக்க கூடியது.
இந்த நாட்டிலே புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவாகள் யார் என பார்த்தால் நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அளித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்கள்.
எனவே இந்த சட்டத்தை முழுமையாக நீக்கும் வரைக்கும் எமது போராட்டங்களின் வடிவம் மாறினாலும் போராட்டம் தொடரும் என்றார்.