ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனைதொடர்ந்து தப்பி ஓடிய சதீஷை பிடிக்க போலீசார் 7
தனிப்படைகள் அமைத்துள்ளனர். கொல்லப்பட்ட மாணவி சத்யா ஆதம்பாக்கம் போலீஸ் நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகளாவார் கொலையாளி சதீஷ், ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் ஆவார்.

—-

தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷ் நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மானீக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

Related posts