குறைந்த எடைக்கு பாண்ணை விற்பனை செய்த 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எடைக்குறைவான பாண்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் நாடு ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஒரு இறாத்தல் பாண் 450 கிராம் எடை இருக்க வேண்டும்.
சரியான எடை இல்லாமல் பாண்ணை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதுடன், . தனிப்பட்ட வணிக உரிமையாளருக்கு ரூ. 10,000 விதிக்கப்படுகிறது.
குறைந்த எடையில் பாண்ணை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூபா 10,000 முதல் ரூபா 100,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
அதிக விலையை வசூலிக்கும் பேக்கரிகள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியபடுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களைக் கேட்டுள்ளது.