லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் 4 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், டைரக்டர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன.
இந்த நிலையில் இன்னொரு வலிமையான 4-வது வில்லனாக டைரக்டர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் மிஷ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்பட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
சவரக்கத்தி படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்தார். சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த படத்தில் எம்.எல்.ஏ.வாகவும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக முக்கிய வில்லனாகவும் நடிக்கிறார்.
தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்கவும் மிஷ்கினிடம் பேசி வருகிறார்கள்.