ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி புதிய பொறுப்பாளர்கள் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் சுதந்திர கட்சி தனிக்கட்சியாக போட்டியிட முடியாது எனவும், அடுத்த தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் தலைவர்கள் மீண்டும் எழுச்சி பெற முடியாது, ஆனால், மேடையில் யார் வேண்டுமானாலும் ஏறலாம் , இது அரசியல் எழுச்சி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
——
இரட்டைக் குடியுரிமையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யார்..? இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——
மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் சுயாதீன குழுக்களாக மாறி என்ன அரசியல் கருத்துக்கள் கூறினாலும், மொட்டு கட்சி பிளவுபட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை, நாவலப்பிட்டி, புத்தளம் பிரதேசங்களில் பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டங்களில் இருந்து இது சமூகத்திற்குத் தெளிவாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் மொட்டு கட்சி மக்கள் பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.