தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. சோகேலை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்ட்டது . இந்த நிலையில் தொழிலதிபர் சோகேலை திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு செய்துள்ளார்.விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.