வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் ஏற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ண கடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவு பகலாக வடமராட்சி இளைஞசர்களால் நேற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்பட்டத்திருவிழா என்பது பாரம்பரிய ஒருதிருவிழாவாக வடமராட்சி வாழ் மக்களிடம் இருந்து வருகின்றது. இந்த திருவிழா வருடாந்தம் இடம்பெறுகின்றது
எதிர்வரும் ஆண்டு 2023.01.14 அன்று தைப்பொங்கல் அன்று மாலை வல்வெட்டித்துறைத்துறை திறந்தவெளியில் இப் பட்டத் திருவிழாப்போட்டி நடாத்தப்பட உள்ளது.. இதில் 85 பட்டங்கள் 14.01 அன்று ஏற்றப்படயுள்ளதாக வடமராட்சிப் பட்டக்குழுவின் நெறிப்படுத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக இப்பட்டத் திருவிழாப்போட்டி நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது