ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் நேற்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனை ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்ே மகளிர் அணியினர் முன்னெடுத்தனர்.
இதில் பெண்கள் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—–
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.