விடுவிக்கப்பட்ட நான்கு பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர்..

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்கு பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்களென இந்திய மத்திய உள்துறை அமைச்சு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முருகன் (ஸ்ரீஹரன்), ரொபர்ட் பயஸ், எஸ் ஜெயக்குமார் மற்றும் டி சுதேந்திரராஜா சாந்தன் ஆகிய நால்வரையும் நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நால்வரும் தற்போது திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று அந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடு அல்லது குறிப்பிடப்பட்ட திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த விடுதலை மற்றும் நாடு கடத்தல்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட சிலர் இலங்கையைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகின்றனது.

இதில் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது.

எனினும் ஏனைய நாடுகளின் விசா நடைமுறைகளைப் பொறுத்தே,இது தீர்மானிக்கப்படும் என்றும் தமிழக அரச அதிகாரி ஒருவரைக் கோடிட்டு இந்திய செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts