நடிகர் ராமராஜன் பல வருட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படம் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் கிராமிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்த ராமராஜன் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
அரசியலிலும் ஈடுபட்டார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படம் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார்.
இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தை ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
இவர் தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.
வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சாமானியன் படத்துக்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாமானியன் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.
இளையராஜாவை ராமராஜன் நேரில் சந்தித்து பல வருடங் களுக்கு பிறகு நடிப்புக்கு திரும்பி உள்ளேன்.
இந்தப் படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்க இளையராஜா சம்மதம் தெரிவித்து உள்ளார்.
ஒளிப்பதிவு அருள் செல்வன், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.