எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த 23 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை (29) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
——
ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள 154 இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அமைச்சரவை அனுமதியை அமைச்சர் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.