நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார். சென்னை மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ‘மாயாநதி’படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார்.
தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
குறிப்பாக அவரது பூங்குழலி கதாபாத்திரம் மற்றும், ஏ.ஆர். ரகுமான் இசையில் அமைந்த ‘அலைகடல்’பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
முன்னதாக விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான நிலையில், குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ள அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள ஐஸ்வர்யா தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நகைச்சுவையை மையமாக வைத்து தயாரான எந்தப் படத்திலும் இதுவரை நடிக்காமல் இருந்த எனக்கு முதல் தடவையாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்தது. சமீப காலமாக நகைச்சுவைப் படங்கள் அதிகம் வரவில்லை. நான் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன். ஆனால் நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம்.
குஸ்தி வீராங்கனையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் பாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்திருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாகத் தொட்டார்.
அதனால் அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் அடித்த அனுபவம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.
ஐஸ்வர்யா தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் குறித்து பேசினார். எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் மோசமான தொடுதல்களை எதிர்கொள்வார்கள். பேட் டச் இன்னும் ஒரு பிரச்சனை. குருவாயூரில் சிறுவயதில் இப்படி ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. கோயம்புத்தூரில் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போதும் அப்படித்தான் நடந்தது. இப்போது அப்படி ஏதாவது நடந்தால் நான் எதிர்வினையாற்றுவேன்.
ஆனால் சிறு வயதில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. இது போன்ற விஷயங்கள் பின்னாளில் நம் மனதில் நிற்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் மாற்றம் வருமா என்று தெரியவில்லை. கார்கி போன்ற படங்களில் அவை விவாதிக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட படங்கள் விவாதங்களை ஆரம்பிக்கும். பாதிக்க்பட்டவர்களின் மன மோதல்கள் விவாதிக்கப்பட வேண்டும் என கூறினார். ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, மலையாளத்தில் கிங் ஆப் கோதா, க்ரிஸ்டோபர் ஆகிய படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.