ஓமான் நோக்கி பறந்த அதிகாரிகள்

ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமான் நோக்கு சென்றுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓமான் ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குறித்த குழுவினர் நேற்று (10) பயணித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒரு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் தொடர்பில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts