சினிமா நடிகைகள் வெள்ளித் திரையில் ரசிகர்களை தங்கள் அழகால் கிறங்கடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் மறுபக்கம் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை.
நாள் முழுக்க அதிக அளவில் வெப்பம் வெளிப்படுத்தும் ராட்சத மின்சார விளக்குகளுக்கு முன் நடிக்கிறார்கள். கதாபாத்திரங்களை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்த ரசாய னங்கள் கலந்த மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள்.
காலையில் போடும் மேக்கப்பை மாலையில்தான் கலைக்கின்றனர். படம் தோல்வி அடைந்தால் மன ரீதியான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதோடு வலைத்தளங்களில், மீம்ஸ், டார்ச்சர், உருவக்கேலி போன்ற நெகடிவ் விமர்சனங்களுக்கு ஆளாகி மன அழுத்தத்துக்கு தள்ளப்படு கிறார்கள்.
குறிப்பிட்ட காலத்தில் திருமண வாழ்க்கை அமையாதது. திருமணமான பிறகும் விவாகரத்து, காதல் துரோகம் போன்றவற்றாலும் மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற காரணங்கள் அவர் களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கவே செய்கின்றது.
அதன் விளைவால் பலவிதமான நோய்களில் சிக்கி அவதிக்குள்ளாகிறார்கள். அதோடு மரபு வழி வியாதிகளும் பற்றிக்கொள்கிறது. கறுப்பு, வெள்ளை சினிமா காலத்தில் இருந்து நடிகைகள் நோய்க்கு உள்ளாவது தொடர்ந்தாலும் சமீப காலமாக நடிகைகள் நோயால் பாதிக்கப்படும் செய்திகள் அதிகம் வருகின்றன.
பலர் புற்றுநோயிலும் சிக்கி உள்ளனர். தமிழில் கவுதமி, இந்தியில் மனிஷா கொய்ரலா, சோனாலி பிந்த்ரே, மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ், தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி என்று புற்றுநோயில் சிக்கிய நடிகைகளின் பட்டியல் நீள்கிறது. இவர்களில் சிலர் பல மாதங்கள் தொடர் சிகிச்சை எடுத்து நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
மதுவுக்கு அடிமையாகி அதனால் ஏற்பட்ட புற்று நோயிலிருந்து மீண்டு வந்தேன் என்று மனிஷா கொய்ராலாவின் சுயசரிதையில் வெளியான தகவல் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
ஸ்டுடியோவுக்குள் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய அவரது புகைப்படம் திரையுலகினரை உலுக்கி எடுத்தது. இந்த நோய் பாதிப்பில் இருந்து மீள அதிக காலம் ஆகலாம் என்றும் தெரிவித்து உள்ளார். சமந்தாவுக்கு இருந்தது போன்ற பாதிப்பு தனக்கும் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து மீண்டதாக தெரிவித்து நடிகை பியா பாஜ்பாய் இன்னொரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை சுருதிஹாசன் தனக்கு ஹார்மோன் மற்றும் பி.சி.ஓ.எஸ் என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்புகள் இருப்பதாகவும், இது தவிர எண்டோமெட்ரியாசிஸ் என்ற பாதிப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார்.
இதன் மூலம் சமச்சீரற்ற நிலை, வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு, வளர்சிதை மாற்றங் கள் போன்றவற்றோடு போராட வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். வட இந்திய நடிகைகள் சிலர் நோயோடு போராடி உயிரையும் விட்டுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் `சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதால் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் உடலை ஆரோக்கியத்துடன் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதே ரசிகர் களின் ஆவல், வேண்டுதல் எல்லாமே.