டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது.
4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார்.2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜீரோ’ திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அது தோல்வியடைந்தது இந்த படம் தேசபக்தியை முன்னிறுத்தும் படம் என கூறப்படும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின.
பதான் பாடல் 13.5 கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வரும் நிலையில் அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது ஆபாசத்தின் உச்சம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் விதத்தில் ஷாருக்கான் உடை அணிந்து ஆடுவதற்கு எதிராக சர்ச்சைகள் வெடித்தன. நடிகைகளும், நடிகர்களும் விட்டால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக முழு நிர்வாணமாகவே நடித்து விடுவார்கள் போல.
அந்த அளவுக்கு ஓடிடியில் ஆபாச படங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றவர்களே இப்படி எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டினால் இளம் நடிகைகள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கு செல்வார்கள் என்றும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ஷாருக்கான் 4 வருடம் கழித்து வரும் இந்த படம் குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், படம் ஒடிடி உரிமையில் பெரும் தொகையைப் பெற்றுள்ளது.படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்பே அதன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பெற்றுவிட்டது.
இந்த தொகையானது ‘கேஜிஎப் 2’ போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும், இது இந்த ஆண்டின் அதிகபட்ச வசூல் ஆகும், அதாவது கேஜிஎப் அத்தியாயம் 2 சுமார் ரூ 1278 கோடிகள். வசூலித்தது.
படத்தின் ஒடிடி உரிமை அமேசான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டது மற்றும் தயாரிப்பாளர்கள் அதற்கு சுமார் ரூ 100 கோடி வசூலித்தது உள்ளனர்.படம் திரையரங்குகளில் வெளியான 2 மாதங்களுக்குப் பிறகுதான் ஒடிடியில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.கடந்த சனிக்கிழமைதான் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதாவது ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘பதான்’ படத்தை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திலோ ஒடிடிட் தளத்தில் பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்.எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.