மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார். அ
ப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் நடித்து வரும் அவர், இன்று பதிவிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுரை விமானநிலையத்தில் ‘சிஆர்பிஎப்’ அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் அதில் கூறியுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் ‘சிஆர்பிஎப்’ அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் அதில் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது பரபரப்பை இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;- கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையத்தில் வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.