மதுபான வகைகளின் கலால் வரி 20% இனால் அதிகரிப்பு

அனைத்து வகையான மதுபானங்கள், வைன்கள், பியர்கள் போன்றவற்றின் மீதான கலால் வரி இன்று நள்ளிரவு (04) முதல் 20% இனால் அதிகரிக்கப்படவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் இடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.

இதேவேளை, ஜனவரி 01ஆம் திகதி முதல் சிகரெட் மீதான வரி 20% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பீடி ஒன்றுக்கு வரியாக ரூ. 2 அறவிடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்நாட்டு சாராய வகைகளின் விலைகள் ரூ. 206 மற்றும் ரூ. 224 இனாலும் உள்நாட்டு தயாரிக்கப்படும் வெளிநாட்டு சாராயம் ரூ. 266 இனாலும் பியர் வகைகள் ரூ. 21 மற்றும் ரூ. 39 இனாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட 2312/70 மங்ஞம் 2312/68 ஆகிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

Related posts