கந்தாரா’, ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘செல்லோ ஷோ’ தி காஷ்மீர் பைல்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இந்தியப் படங்களாகும்.
புதுடெல்லி 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இடம்பிடித்துள்ளது.
தி காஷ்மீர் பைல்ஸுடன், இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் உள்ளன. ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’, ‘பிளாக் பாந்தர்: வகாண்டா பாரெவர்’ மற்றும் அதிக வசூல் செய்த ‘ஆப்டர்சன்’ ஆகிய ஹாலிவுட் படங்களும் இடம் பெற்று உள்ளன.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது படம் ஆஸ்கர் விருதுகளுக்கான முதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்தியை பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்றும் அவர் கூறினார்.
பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் ‘சிறந்த நடிகர்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கந்தாரா’, ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘செல்லோ ஷோ’ ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள மற்ற இந்தியப் படங்களாகும்.
ஆஸ்கார் விருதுக்கான தேர்வு நடைபெற்று வந்தாலும் இந்த இந்தியத் திரைப்படங்கள் மிகவும் மதிப்புமிக்க விருதுகளுக்கான போட்டியில் இன்னும் உள்ளன.