கிழக்கு கோதாவரியில் உள்ள தனுகு என்ற இடத்தில் உள்ள ஒரு தியேட்டரிலும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்தனர்.
இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.
பொதுவாக ரசிகர்கள் தங்கள் கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வருவதை தியேட்டர்களில் கட்-அவுட்கள் வைத்தும் பட்டாசுகள் வெடித்தும் பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஒருபடி மேலே போய் ஆட்டுக்கிடாவை பலிகொடுத்து சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
பொங்கலையொட்டி சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா.
தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
இந்த படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டு கட் அவுட் வைத்தனர். கொடி தோரணங்கள் கட்டினார்கள்.
திருப்பதியில் உள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணா படம் வெற்றிபெற வேண்டி அவரது ரசிகர்கள் ஒரு ஆட்டுக்கிடாவை கொண்டு வந்து வெட்டி பலி கொடுத்தனர்.
அப்போது ஜெய் பாலையா ஜெய் பாலையா என்று கோஷங்களும் எழுப்பினர்.
இந்த வீடியோ வைரலானது.
இதுபோல் கிழக்கு கோதாவரியில் உள்ள தனுகு என்ற இடத்தில் உள்ள ஒரு தியேட்டரிலும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்தனர்.
இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டுக்கிடாவை பலி கொடுத்த பாலகிருஷ்ணா ரசிகர்கள் 10 பேரை கைது செய்தனர்.