நடிகை மம்தா மம்தா மோகன்தாஸ் 2005 இல் ஹரிஹரன் இயக்கிய மயோக்கம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். பஸ் கண்டக்டர் படத்தில் மம்முட்டி தங்கையாக , லங்காவில் சுரேஷ் கோபி (2006), மதுசந்திரலேகாவில் ஜெயராம் மற்றும் பாபகல்யாணியில் மோகன்லால் உடன் நடித்து உள்ளார்.
மம்தா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. மலையாள சினிமாவில் பணியாற்றிய பிறகு தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன்,குரு என் ஆளு,ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
நடிகை மம்தா மோகன்தாஸ் தான் தீவிர நோயால் பாதிக்க்பட்டு இருப்பதாக கூறி உள்ளார்.மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ என்ற ‘ஆட்டோ இம்யூன்’ நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மம்தா ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது இயற்கையான நிறம் மாறுகிறது என்று கூறி பதிவிட்டு உள்ளார். நடிகர் பல செல்பிகளையும் பகிர்ந்துள்ளார். முதல் படங்களில், நடிகை ஒரு தோட்டத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
கருப்பு சட்டை மற்றும் ஜாக்கெட் அணிந்துள்ளார். நான் என் நிறத்தை இழக்கிறேன்… தினமும் காலையில் நான் எழுகிறேன், உங்கள் முதல் சூரிய கதிர் என்னை எழுப்புகிறது,” “சூரியன் உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்குக் கொடு..
உன் அருளுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டு உள்ளார். மம்தா வண்ணம், ஆட்டோ இம்யூன் நோய், ஆட்டோ இம்யூனிட்டி, விட்டிலிகோ, ஞாயிறு, ஸ்பாட்லைட், மேக்கப் இல்லை, உங்களை நீங்களே குணப்படுத்துங்கள், என்ற ஹேஷ்டேக்குகளையும் சேர்த்துள்ளார்