இலங்கையின் முதலாவது பெண் இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் இன்று (19) காலை காலமானார்.
மறைந்த சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இலங்கையின் முதலாவது திரைப்பட இயக்குனருமான சுமித்ரா பீரிஸ் (88), கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார்.
அவர் இதுவரை இவர் இயக்கிய படங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விருதுகளை வென்றுள்ளன. இவர் இயக்கிய ‘கங்க அத்தர’ (ගඟ අද්දර) திரைப்படம் மிகவும் பிரபலமானது.
1978 இல் தொடங்கிய அவரது திரைப்படத் தயாரிப்பு பயணத்தில், அவர் பல சிறந்த, கலை மற்றும் சினிமா படங்களை இயக்கியுள்ளார். அவரது கெஹணு லமய், கங்க அத்தர, யஹலு யெஹெலி, மாயா, சாகர ஜலய மதி ஹெண்டுவா ஒப சந்தா, லொகு துவ, துவட்ட மவக மிச, சக்மன் மலுவ, யஹலுவோ போன்ற படைப்புகள் இரசிகர்களின் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலண்டன் திரைப்பட விழா, டோக்கியோ தெற்காசியா மற்றும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமித்ரா பீரிஸின் திரைப்படங்களுக்கு சிறந்த இயக்கத்திற்காக விருதுகளை பெற்றுள்ளதோடு, உள்நாட்டிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன. சரசவிய, OCII, ஜனாதிபதி விருது பெற்ற சுமித்ரா பீரிஸின் படங்களில் கெஹணு லமய், கங்க அத்தர, யஹலு யெஹெலி, மாயா, சாகர ஜலய மதி ஹெண்டுவா ஒப சந்தா, துவட்ட மவக மிச போன்றவை அடங்கும்.