´நான் உன்னை ஆச்சரியப்படுத்தப்போகிறேன்´ என கூறி பல்கலைக்கழக மாணவியின் கண்களை கட்டி தனது காதலியை கொன்றதாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கின் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கும் போதே சந்தேகநபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது காதலியை ´சூட்டி´ என அழைப்பதாகவும், முக்கியமான ஒரு விடயத்தை பேச விரும்புவதாக கூறி தனது காதலியை கொழும்பு குதிரை பந்தய திடலிற்கு அழைத்து வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
தனது காதலி தன்னை தொடர்ந்து திட்டுவதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் மனநோயாளி எனக் கூறி கேலி செய்வதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட யுவதியுடன் தொடர்பு வைத்திருந்தாலும், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை தெரிவித்திருக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலிக்கு இது தெரியவந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது யுவதி தன்னுடன் கோபமடைந்து காதல் தொடர்பை நிறுத்தியதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.