தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை கைவிடுவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் ஒருவர் தாக்கல் செய்த
நீதிப்பேராணை மீதான விசாரணையின் போதே, நிதியமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான நிதியைக்கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதியை திரட்டுவதானது திறைசேரிக்கு கடும் சவாலான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச கடன் தரப்படுத்தல் சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை பின்னிலையில் உள்ளதால் சர்வதேச சந்தையில் இருந்து நிதிபெறுவது சிரமமான விடயம் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.