முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.
திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.